தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் முதல் கட்டமாக சென்னையில் நாளை தொடங்கப்படுகிறது.
விலைவாசி உயர்வால் திக்குமுக்காடிய மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை போன்று தமிழ்நாடு அரசு வழங்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை முதல் கட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மளிகை பொருள் விலை உயர்வு
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது, இது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பெருமளவில் பாதித்துள்ளது.தீபாவளி பண்டிகைக் காலத் தேவையினாலும், சந்தை வரத்துக் குறைவினாலும் இந்த விலை ஏற்றம் உச்சத்தை எட்டியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
ரூ.200க்கு கடலை, உளுந்து, பாசிப்பருப்பு வழங்க திட்டம்
மளிகை பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்தினர் தங்களது கிச்சன் கேபினட்களிடம் வசவு பெற்று வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை நெறுங்கும் வேலையில் இது போன்ற மளிகை பொருட்கள் விலை உயர்வு மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுவதாக வேதனை தெரிவிக்கும் நடுத்தர குடும்பத்தினர், தவெக அரசை சரமாரிய திட்டித் தீர்த்தனர்.
கூட்டுறவு அங்காடிகள் மூலம் மளிகை பொருள் விற்பனை
மளிகை பொருட்களை சாமாணிய மக்களும் வாங்கும் வகையில், 200 ரூபாய்க்கு 10 பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் உள்ள கூட்டுறவு விற்பனை அங்காடிகளில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், தணியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலிவு விலை மளிகை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் அமுதம் அங்காடிகளில் சந்தை விலையை விடக் குறைவான விலையில் தரமான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் மளிகைப் பொருட்கள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் திருவல்லிக்கேணி, அசோக்நகர், பெசன்ட்நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், ராயப்பேட்டை ஆகிய 8 இடங்களில் டி.யு.சி.எஸ். காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடிகள் (சுய சேவைப் பிரிவு) இந்த சங்கத்தின் கீழ் இயங்கி வருகின்றன. அமுதம் கூட்டுறவு அங்காடிகளிலும் மலிவு விலை மளிகை பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
