வே தாந்தா குழுமம், தனது நிதி நிலையை வலுப்படுத்தவும், அதிக வட்டி கொண்ட கடன்களை குறைக்கவும் என்.சி.டி., அதாவது மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வாயிலாக 2,575 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வழங்கியுள்ளது. இதில், ஒரு லட்சம் ரூபாய் முகமதிப்பு கொண்ட, 2,57,500 பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சர்வதேச சந்தையில் 500 மில்லியன் டாலர், கிட்டத்தட்ட 4,600 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் பத்திரங்களை இந்நிறுவனம் வெளியிட்டபோது, முதலீட்டாளர்கள் மத்தியில் 3 மடங்கு வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து, ஜூன் மாதம், உள்நாட்டு சந்தையில் வெளியிடப்பட்ட என்.சி.டி., பத்திரங்களுக்கு 60 சதவீதம் கூடுதல் விண்ணப்பங்கள் குவிந்தன. இதன் வாயிலாக, திரட்டப்பட்ட நிதியை கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளில், வேதாந்தா குழுமத்தின் தாய் நிறுவனமான ‘வேதாந்தா ரிசோர்சஸ்’ கிட்டத்தட்ட 34,000 கோடி ரூபாய் கடனை குறைத்துள்ளது.
