புதுடில்லி, அதானி இன்ப்ரா நிறுவனம், பொறியியல், கட்டுமான சேவை நிறுவனமான புஞ்ச் லாய்டை 281.10 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது.
புஞ்ச் லாய்டு, தனக்கு திரும்ப செலுத்த தவறிய 854 கோடி ரூபாய் கடனை குறிப்பிட்டு, அந்நிறுவனத்துக்கு எதிராக திவால் நடவடிக்கைகளை துவக்குமாறு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் 2019ல் விண்ணப்பித்திருந்தது. அப்போது அந்நிறுவனத்தின் மொத்த கடன் 6,000 கோடி ரூபாய் ஆகும். திவால் கோரிக்கையை, மற்றொரு கடன்தாரரான எஸ்.பி.ஐ., வங்கி எதிர்த்தது.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை அவ்வங்கி காரணமாகக் காட்டியிருந்தது. இருப்பினும், 2022 ஜூனில் நிறுவன சொத்துகளை விற்று கடன்களை அடைக்கும் நடைமுறைகளை தீர்ப்பாயம் துவக்கியது.
இந்நிலையில் 2025 செப்.8 அன்று14வது சுற்று மின் ஏலம் நடைபெற்றது. அந்நிறுவனத்தை வாங்க அதானி இன்ப்ரா இந்தியா முன்வந்தது.
