குருகிராம் வீடு கட்ட அனுமதி அளிப்பதாக கூறி, கட்டுமான நிறுவனம் ஒன்றில் இருந்து, 40,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குருகிராம் முனிசிபல் கார்ப்பரேஷன் ஹெல்பர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
குருகிராம் பகுதியை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை அணுகிய அந்த நகரின் முனிசிபாலிட்டியில் ஹெல்பராக பணியாற்றும் கபில் என்பவர், 50,000 ரூபாய் தந்தால், கட்டட உரிமம் தருவதாக கூறினார்.
லஞ்சமாக பணம் கொடுக்க விரும்பாத கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், கபில் கேட்டதை, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, 40,000 ரூபாயை லஞ்சமாக பெற்ற போது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
