ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலேயே இருந்து வருகிறது. இன்று காலை சந்தை தொடங்கும்போதே, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.93.83 என வர்த்தகம் ஆனது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும்.என்ன காரணம்?
இந்திய ரூபாயின் சரிவிற்கு மிக முக்கிய காரணம், கச்சா எண்ணெய் விலை ஏற்றமே. இந்தியா எரிசக்திகளுக்குப் பிற நாடுகளை நம்பி இருக்கிறது. அங்கே இருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டுமென்றால், இந்தியாவிற்கு அமெரிக்க டாலர் வேண்டும். அமெரிக்க டாலரை வாங்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது. ஈரான் போர்
மேலும், எரிசக்தி போன்றவைகளுக்கு இந்தியா பிற நாடுகளை நம்பியிருப்பதால், ஈரான் போரின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய முதலீடுகளை விற்கின்றனர். இதுவும் இந்திய ரூபாய் சரிவிற்குக் காரணம். இது தொடர்ந்து கொண்டிருந்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கும். அதனால், இந்திய ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கி தங்களிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களைக் கொஞ்சம் விற்கும். சந்தையில் டாலர்களின் புழக்கம் அதிகரிக்கும் போது, அதன் டிமாண்ட் குறையும்… இதனால், விலையும் குறையும். இந்திய ரூபாய் வலுபெறும். இந்திய ரிசர்வ் வங்கியின் இத்தகைய நடவடிக்கையைத் தான் சந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
