காஜல் அகர்வால் கருத்து: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ரஷ்மிகா மந்தன்னா நடிப்பில் வெளியான சிக்கந்தர் பாலிவுட் படத்தில் நடித்திருந்தார் காஜல் அகர்வால். அந்த படத்தில் நடித்தது பற்றி காஜல் அகர்வால் தெரிவித்த விஷயம் பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இனிமேல் காஜல் அகர்வாலுக்கு பாலிவுட் வாய்ப்புகள் கிடைத்த மாதிரி தான் என்கிறார்கள்.
காஜல் அதர்வால் கூறியதாவது, தென்னிந்திய சினிமாவில் நேரம் தவற மாட்டார்கள். சொன்னால் சொன்ன நேரத்திற்கு வந்துவிடுவார்கள். நானும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு செல்வேன். ஆனால் இந்தி திரையுலகில் அப்படி கிடையாது. நேரம் தவறாமை பற்றி தென்னிந்திய சினிமாவிடம் இருந்து பாலிவுட் ஆட்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
காத்திருந்த காஜல்: என் சிறு வயது கிரஷ் சல்மான் கான். அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் இருப்பதிலேயே என்னை அதிக நேரம் காக்க வைத்த நடிகர் சல்மான் கான் தான். இது எனக்கு பழக்கமான விஷயம் கிடையாது. ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு, ஹீரோ எங்கே காணோம் என வியந்திருக்கிறேன். அவர் மதியம் அல்லது மாலை நேரத்தில் தான் படப்பிடிப்புக்கு வருவார். அதனால் செட்டில் சும்மா இருக்காமல் அங்குள்ள ஜிம்மில் ஒர்க்அவுட் செய்ய சென்றுவிடுவேன். தென்னிந்தியாவில் ஹீரோயின்களை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள். ஹீரோயின்களின் இடுப்பை மாட்டும் காட்டுவது கிடையாது என்றார்.
படப்பிடிப்புக்கு சல்மான் கான் எப்பொழுதுமே லேட்டாக வருகிறார் என்று பாலிவுட்டில் கிசுகிசுப்பது உண்டு. இந்நிலையில் காஜல் அகர்வால் ஓபனாக பேசியது சல்மான் கான் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. நடிச்சது சிறு கதாபாத்திரம், இதில் பில்ட்அப்பை பாரு என்கிறார்கள். சல்மான் பற்றி விமர்சித்திருப்பதால் பாலிவுட்டில் காஜலுக்கு எதிர்காலம் இல்லை என பேசுகிறார்கள் இந்தி ரசிகர்கள்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான சிக்கந்தர் படம் தோல்வி அடைந்தது. சல்மான் கானுக்கு மனைவியாக ரஷ்மிகாவை நடிக்க வைத்தது குறித்தும் விமர்சிக்கப்பட்டது. மகள் வயது நடிகையை போய் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்களே என்றார்கள். ஆனால் ஹீரோ, ஹீரோயின் வயது வித்தியாசம் பார்க்காமல் நடிக்க வைப்பது என்பது சினிமாவில் காலகாலமாக உள்ளது.
காஜல் படங்கள்: சேத்தன் டி.கே. இயக்கத்தில் ஸ்ரேயாஸ் தல்பதே, காஜல் அகர்வால் நடித்திருக்கும் தி இந்தியா ஸ்டோரி படம் நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கிறது. அது தவிர்த்து நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் ராமாயணா இந்தி படத்தில் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். டாக்சிக் பட நாயகன் யஷ் தான் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரன்பிர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இந்நிலையில் காஜல் அகர்வால் மாதிரி ஒரு மனைவி இருக்கும்போது ராவணன் ஏன் போயும் போயும் சாய் பல்லவியை கடத்தப் போகிறார் என்று இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். இந்தி பேசத் தெரியாத சாய் பல்லவியை ஏன் சீதையாக நடிக்க வைத்தீர்கள் என்று ஏற்கனவே இந்தி ரசிகர்கள் வேறு நிதேஷ் திவாரியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்த சாய் பல்லவி ரசிகர்களோ, அவர் தான் சீதையாக நடிக்க சரியான ஆள். படம் வரும்போது உங்களுக்கே புரியும் என்கிறார்கள். ராமாயணா படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
