ரோம்: ஐரோப்பாவில் நடந்த வினோதமான திருட்டு சம்பவம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்று வருகிறது. இது தங்கமோ, வைரமோ அல்லது பணமோ அல்ல; மாறாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ‘கிட்கேட்’ சாக்லெட்டுகளே திருடு போயுள்ளன.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள சாக்லெட் ஆலையில் இருந்து, மற்றொரு ஐரோப்பிய நாடான போலந்துக்கு செல்லும் வழியில், சாக்லெட் லாரி கடந்த வாரம் மாயமானது. அதில், 12 டன் எடையுள்ள, 4,13,793 கிட்கேட் சாக்லெட் பார்கள் இருந்துள்ளன.
‘நெஸ்லே’ நிறுவனம் இந்த திருட்டுக்கு வித்தியாசமான, நகைச்சுவையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘நாங்கள் எப்போதும் கிட்கேட்டுடன் இடைவேளை எடுத்துக் கொள்ளுமாறு மக்களை ஊக்குவித்து வருகிறோம்.
‘ஆனால் திருடர்கள் இந்த செய்தியை மிகவும் நேரடியாக எடுத்துக் கொண்டு, 12 டன் சாக்லேட்டுடன் இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளனர்’ என்று கூறப் பட்டுள்ளது.
