பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் லக்சயா சென் 2வது இடம் பிடித்தார்.
பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-12’ இந்தியாவின் லக்சயா சென், ‘நம்பர்-2’ வீரரான சுன்-யி லின் மோதினர். முதல் செட்டை 15-21 என இழந்த லக்சயா, இரண்டாவது செட்டை 20-22 என போராடி கோட்டைவிட்டார்.
மொத்தம் 57 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய லக்சயா சென் 15-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இத்தொடரின் பைனலில் 2வது முறையாக ஏமாற்றினார் லக்சயா. இதற்கு முன், 2022ல் நடந்த பைனலில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனிடம் வீழ்ந்தார். இத்தொடரில் இதுவரை பிரகாஷ் படுகோனே (1980), கோபிசந்த் (2001) மட்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். மற்ற இந்திய நட்சத்திரங்களான பிரகாஷ் நாத் (1947), செய்னா நேவல் (2015) தலா ஒரு முறை பைனலில் தோல்வியடைந்தனர்.
