லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக துரை குமார் பொறுப்பேற்பு

சேலம், தூத்​துக்​குடி மாவட்​டத்​துக்கு புதிய ஆட்​சி​யர்​கள் நியமிக்​கப்​பட்​டனர். தலை​மைச் செயலர், சென்னை காவல் ஆணை​யரும் புதி​தாக நியமிக்​கப்​பட்​டனர். தமிழக உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மாருக்கு பதிலாக, சுற்​றுலா, பண்​பாடு, அறநிலை​யத் துறைச் செயல​ராக இருந்த மணி​வாசன் பணி​யமர்த்​தப்​பட்​டார். இதற்​கிடையே, ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புத் துறை (லஞ்ச ஒழிப்​புத் துறை) இயக்​குந​ராக இருந்த டிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதம் மாற்​றப்​பட்​டார்.

அந்த இடத்​துக்கு சைபர் க்ரைம் டிஜிபி சந்​தீப் மிட்​டல் நியமிக்​கப்​பட்​டார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரி​வித்​தது. இதையடுத்​து, டேவிட்​சன் தேவாசிர்​வாதம் கூடு​தலாக கவனித்து வந்த ஆயுதப்​படை டிஜிபி பொறுப்பை மட்​டும் சந்​தீப் மிட்​டலுக்கு வழங்கி தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. ஆனால், லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குநர் யார் என்று உத்​தர​வில் குறிப்​பிடப்​பட​வில்​லை.

Source link