லட்சுமி ப்ரியாவ பார்த்தால் எப்படி தெரியுது?: பிக் பாஸ் எடிட்டருக்கு குசும்ப பார்த்தீங்களா!

லட்சுமி ப்ரியாவும், சாப்பாடும்: பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஆட்களில் லட்சுமி ப்ரியாவின் கவனம் எல்லாம் சோறு மீது தான் இருக்கிறது என சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். சோறு இருக்கும் இடத்தில் லட்சுமி ப்ரியா இருப்பார். இல்லை என்றால் சாப்பாட்டுக்காக சண்டை நடந்தால் அங்கு அவரை பார்க்கலாம் என பெயர் வாங்கிவிட்டார்.

பிக் பாஸ் வீட்டை ப்ளூ டீம், ரெட் டீமாக பிரித்த பிறகு ஏற்பட்ட சோத்து பிரச்சனையிலும் லட்சுமி ப்ரியா இருந்தார். அதாவது தேவைக்கு அதிகமாக சாப்பாட்டை எடுத்து பதுக்கி வைத்தார் டிடிஎஃப் வாசன். அதை பார்த்த லட்சுமி ப்ரியாவோ நீ மட்டும் தான் பதுக்குவியா, நானும் செய்வேன்ல என சண்டைக்கு வந்தார்.

தேவா சார் பாட்டு: அய்யோ லட்சுமா, எப்பொழுது பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடு என்று இருக்காதீர்கள் என பிக் பாஸ் பார்வையாளர்கள் அறிவுரை செய்தார்கள். இந்நிலையில் இன்று காலை போட்டியாளர்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப பிரபுதேவா நடிப்பில் தேனிசைத் தென்றல் தேவா இசையில் வெளியான நினைவிருக்கும் வரை படத்தில் வந்த ஊத்திக்கினு கடுச்சுக்கவா பாடலை போட்டுவிட்டார்கள். அதை கேட்ட போட்டியாளர்கள் எழுந்து வந்து காமன் ஏரியாவில் டான்ஸ் ஆடினார்கள்.

அப்பொழுது பாவம் அந்த வயித்துக்கு பசிக்கச் சொல்லி தந்தது யாரு என்கிற வரி வந்தபோது படக்கென்று கேமராவை லட்சுமி ப்ரியா பக்கம் திருப்பிவிட்டார்கள். அதை பார்த்துவிட்டு தான் யோவ் எடிட்டர், இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு சார். சாப்பாடுனு வந்ததும் சரியாக லட்சுமி ப்ரியாவை காட்டியிருக்கிறீர்கள் என சிரிக்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால் லட்சுமி ப்ரியாவின் ஆதரவாளர்களுக்கோ எடிட்டர் செய்த காரியம் பிடிக்கவில்லை. எங்கள் லட்சுமி ப்ரியாவை பார்த்தால் சோத்துமூட்டை மாதிரி தெரிகிறதா?. சாப்பாட்டுனு வரி வந்ததும் அவரை ஜூம் செய்து காட்டியிருக்கிறீங்க என குமுறியிருக்கிறார்கள்.

LP பற்றி விமர்சனம்: டிவி சீரியல்கள் மூலம் லட்சுமி ப்ரியாவுக்கு ஏற்கனவே ரசிகர்கள் கூட்டம் இருந்த நிலையில் தான் அவர் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த சீரியல் ரசிகர்கள் எல்லாம் லட்சுமிக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் பிக் பாஸ் பார்க்கும் ஆட்களோ லட்சுமி ப்ரியா மாதிரி ஒரு ஒர்ஸ்ட் பெர்ஃபார்மரை பார்த்தது இல்லைஎன விமர்சிக்கிறார்கள். நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரம் அமைதியாக இருந்து அந்த வீட்டில் நடப்பதை எல்லாம் கவனித்து வந்தார் லட்சுமி ப்ரியா.

இரண்டாவது வாரம் அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆனந்தி வந்த பிறகு ஃபுல் ஆக்டிவ் மோடுக்கு மாறினார். அதில் இருந்து இதுவரை தன்னால் என்ன கன்டன்ட் கொடுக்க முடியுமோ அதை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பார்வையாளர்களுக்கு தான் லட்சுமி ப்ரியா எது செய்தாலும் பிடிப்பது இல்லை. ஒவ்வொரு வார இறுதியிலும் எவிக்ட் ஆகும் போட்டியாளர் லட்சுமியாக இருக்காதா என எதிர்பார்க்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

டிடிஎஃப் ரசிகர்கள்: இதற்கிடையே முகேஷுடன் மல்லுக்குப் பாய்ந்த டிடிஎஃப் வாசனை விமர்சிக்கவே அவரின் ஆதவாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து லட்சுமி ப்ரியாவை திட்டு திட்டு என திட்டிக் கொண்டிருக்கிறார்கள். சீஸ் டாஸ்க்கில் நீங்கள் ஆனந்தியை தாக்கியது எல்லாம் சரி. ஆனால் எங்கள் வாசனின் குறையை சுட்டிக்காட்டிய முகேஷை அவரை தாக்கியது மட்டும் தவறா லட்சுமி என டிடிஃஎப் ஆட்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Source link