லண்டன்:லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் இன்று (பிப்ரவரி 21) உலகத் தாய்மொழி தினம், 10 இந்திய மாநிலங்களின் நிறுவன தின

லண்டன்:லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் இன்று (பிப்ரவரி 21) உலகத் தாய்மொழி தினம், 10 இந்திய மாநிலங்களின் நிறுவன தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

லண்டனில் இந்தியத் தூதரகம் சார்பில் நடந்த இந்த விழாவில், இந்தியாவின் பல்வேறு மொழி மற்றும் கலாச்சார அடையாளங்கள் போற்றப்பட்டன. குறிப்பாக சமஸ்கிருத ஸ்லோகங்கள், போஜ்புரி கவிதைகள், ஹிமாச்சலப் பிரதேசத்தின் இசை மற்றும் அசாமின் புகழ்பெற்ற பிஹு நடனம் ஆகியவை இடம்பெற்றன.

: அருணாச்சல பிரதேசம், அசாம், பீஹார், ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ராஜஸ்தான், திரிபுரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 10 மாநிலங்களின் நிறுவன தினங்கள் ஒரே மேடையில் கொண்டாடப்பட்டன.

தாய்மொழியின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது மற்றும் பன்மொழி கல்வி மூலம் உலகளாவிய ஒற்றுமையை வளர்ப்பதே இவ்விழாவின் முக்கிய கருப்பொருளாக அமைந்தது.

இந்த ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, ‘பன்மொழிக் கல்வியில் இளைஞர்களின் குரல்’ என்ற தலைப்பில் இந்த தினத்தை முன்னெடுத்துள்ளது.லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் மாணவர்கள் பெருமளவில் இதில் கலந்துகொண்டு தங்கள் மொழி மற்றும் பண்பாட்டுப் பெருமைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Source link