லவ்லினா, நிகாத் ஜரீன் அதிர்ச்சி: ஆசிய குத்துச்சண்டையில்

உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டை அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, நிகாத் ஜரீன் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். பிரீத்தி, அருந்ததி, பிரியா, பைனலுக்கு முன்னேறினர்.

மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, உஸ்பெகிஸ்தானின் அஜிஜா ஜோகிரோவா மோதினர். இதில் லவ்லினா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

மற்றொரு அரையிறுதியில் (51 கிலோ) இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் 0-5, என, சீனாவின் வு யூவிடம் வீழ்ந்தார். மற்ற அரையிறுதியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ (65 கிலோ), பூஜா ராணி (80 கிலோ) தோல்வியை தழுவினர்.

அரையிறுதியில் ஏமாற்றிய லவ்லினா, நிகாத் ஜரீன், அங்குஷிதா, பூஜா ராணி வெண்கலத்தை உறுதி செய்தனர்.

பெண்களுக்கான 54 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரீத்தி பவார் 5-0 என, தென் கொரியாவின் இம் ஏஜியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் (60 கிலோ) இந்தியாவின் பிரியா 5-0 என, மங்கோலியாவின் நமூன் மங்கோரை வென்றார். இந்தியாவின் அருந்ததி சவுத்ரி (70 கிலோ) 4-1 என உஸ்பெகிஸ்தானின் ஓய்ஷா டோய்ரோவாவை தோற்கடித்தார்.

Source link