முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “லெபனானுக்குள் இஸ்ரேல் மேற்கொண்ட ஊடுருவல், ஆரம்ப கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறலாகும். இது, சாத்தியமான உடன்படிக்கைகளுக்கான அர்ப்பணிப்பின்மையின் அபாயகரமான அறிகுறியாகும்.
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றதாகிவிடும். எங்கள் விரல்கள் தொடர்ந்து துப்பாக்கியின் விசையின் மீதே இருக்கும். ஈரான் தனது லெபனான் சகோதர சகோதரிகளை ஒருபோதும் கைவிடாது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஈரானும், அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை அறிவித்தபின், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் 100 ஏவுகணைகளை ஏவி 254 பேரை கொன்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளது. இதனால் சண்டை நிறுத்தத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.
