வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகரிப்பு; மேற்கு மண்டலத்தில் 103 பேர் கைது

கோவை: மேற்கு மண்டலத்தில், ஓராண்டில், 103 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஊடுருவல் அதிகரிப்பால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மேற்கு மண்டலத்துக்குட்பட்ட எட்டு மாவட்டங்களில், பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக, கோவை, திருப்பூரில், வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோ ர் உள்ளனர். சில ஆண்டுகளாக, வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகரித்துள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் நுழைகின்றனர். அங்கிருந்து, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக பெற்று, நாட்டின் பி ற பகுதிகளுக்கு வேலை தேடி செல்கின்றனர்.

குறி ப்பாக, தமிழகம் மற்றும் கேரளாவில் அதிகளவில் பணியில் சேர்கின்றனர். வேலை வழங்கும் நிறுவனத்தினர், ஆவணங்களை முறையாக சோதிப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் சோதனையால் மட்டுமே, இவர்கள் கண்டறியப்படுகின்றனர். மேற்கு மண்டலத்தில், 2024ல், 35 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். 2025ல், 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓராண்டில் இது பல மடங்கு உயர்ந்துள்ளது.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

ஊடுருவல் அதிகரித் துள்ளதால், அனைத்து நிறுவனங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தினர் குறித்து தகவல் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை இங்கு அழைத்து வரும் ஏஜென்ட்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link