வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்துார் பகுதிகளில் மீண்டும் நேற்று மதியம் 3:34 மணிக்கு அதிர்வுடன்

வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்துார் பகுதிகளில் மீண்டும் நேற்று மதியம் 3:34 மணிக்கு அதிர்வுடன் வெடி சத்தம் கேட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

வடமதுரை, எரியோடு, வேடசந்துார், சாணார்பட்டி பகுதிகளில் அடிக்கடி அதிர்வுடன் வெடிசத்தம் கேட்கிறது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் கேட்பது போல் இருந்தாலும் விசாரிக்கும் போது 20 முதல் 40 கி.மீ., துாரம் வரை கேட்பது உறுதியாகியுள்ளது.

ஒன்பதாண்டுகளாக இச்சத்தம் தொடருகிறது. சத்தத்தால் கால்நடைகள் அலறியடித்து ஓடுவதும், பலமற்ற பழமையான கட்டடங்களில் விரிசல் ஏற்படுவதும் என உள்ளது.

நேற்று மதியம் 3:34 மணிக்கு வடமதுரை, வேடசந்துார் பகுதிகளில் மீண்டும் அதிர்வுடன் வெடி சத்தம் கேட்டது. ஏதேனும் பெரிய பாதிப்பிற்கு முன்னோட்டமாக இருக்குமோ என்று மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

Source link