வயநாடு பேரிடர் நிவாரண நிதி விவகாரம்; ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காரசார விவாதம்

தமிழகம் மற்றும் கேரளம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக, ஒன்றிய அரசு திட்டமிட்டே நிபந்தனைகள் மற்றும் தாமதம் போன்ற காரணங்களால் நிதியை முடக்குகிறதா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்குப் பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு மானியங்களுக்கான ஒப்புதல் அளிப்பது முக்கியம். அதே நேரத்தில், அந்த நிதியை முறையாகக் கோரி பெறுவது அதைவிட மிக முக்கியம். வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் ஒரு பகுதியாகக் கேரளத்திற்கு ரூ.311.95 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால், இந்த தொகையை அம்மாநில அரசு முறையாகப் பெற்றுப் பயன்படுத்தவில்லை.  

அதே போல, வன தீயைத் தடுக்கும் பொருட்டு ரூ.17.73 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்ததாக, திருவனந்தபுரம் நகர்ப்புற வெள்ள பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.222.22 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநில அரசு முறையாக விண்ணப்பித்து, அதற்கான விவரங்களைச் சமர்ப்பித்தல் தான் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கும்” என்று தெரிவித்தார்.

இன்னும் இரண்டு வாரங்களில் (ஏப்ரல் 9) கேரளத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையிலான இந்த கருத்து முரண்பாடு, கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Source link