வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலரில் மாற்றம்; அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்காவில் பயன்பாட்டில் இருந்து வரும் கரன்சி “டாலர்” என்று அழைக்கப்படுகிறது. 1861 ஆம் ஆண்டு இந்த டாலர் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை, இந்த டாலர் கரன்சியில் நிதித்துறை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரின் கையெழுத்துக்கள் மட்டுமே இடம் பெற்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்கா தனது 250 ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இந்த விழாவைக் கொண்டாடச் சிறப்பு விழா ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுதந்திர தினத்தை  முன்னிட்டு, இனி வரும் டாலர் கரன்சியில் அதிபரின் கையெழுத்து இடம் பெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 100 டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இனிவரும் டாலர் கரன்சியிலும் படிப்படியாக ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற உள்ளது. இது குறித்து, நிதித்துறை அதிகாரி பிரான்டன் பீச் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ” அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் ட்ரம்ப் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஆகியோர்களின் கையெழுத்து டாலரில் இடம் பெரும். வரலாற்றில் இது முதல் நிகழ்வாகும். இது, அதிபரின் தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது” என்று தெரிவித்தார்.  

சில தினங்களுக்கு முன்பு 250 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இதுவரையில், பதவியில் உள்ள அதிபரின் கையெழுத்து அமெரிக்க டாலரில் இடம் பெறாத நிலையில், இப்போது ட்ரம்பின் கையெழுத்து இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Source link