ம க்களின் அன்றாட தேவைகளில் ஒன்று பால். எனவே, அரசு துறைகளில்,
பால்வளத்துறை முக்கியமாக உள்ளது. ஆனால், இத்துறையில் நடக்கும் ஊழல், துறை
வளர்ச்சியை பாதித்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில், பால்வளத்துறை
சார்பில், சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் பல
செயல்பாட்டிற்கு வரவில்லை.
அவற்றின் விபரம்
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு நுண்கடன் வழங்கும் நோக்கில், ‘வெண் நிதி’ திட்டம் அறிமுகம் செய்யப்படும்
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், பல்வகை சேவை மையங்களாக உருவாக்கப்படும்
2.40 கோடி ரூபாய் மதிப்பில், 14 மாவட்ட ஒன்றியங்களில், 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் புதுப்பிக்கப்படும்
பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து டானிக், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும்
பால் உற்பத்தியாளர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் கறவை மாடுகள் குறித்த விபரங்கள், பால் உற்பத்தி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பயிரிடும் பசுந்தீவனத்தின் அளவு ஆகிய தரவுகள், ‘மொபைல் செயலி’ வாயிலாக சேகரிக்கப்படும்.
நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வராத திட்டங்கள்:
சென்னையில் எம்.கே.பி.நகர் மத்திய நிழற்சாலை, மேற்கு நிழற்சாலை, மீனாம்பாள் சாலை, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலை, ரிதர்டன் சாலை, ஆர்.ஏ.புரம் இரண்டாவது பிராதன சாலை, நங்கநல்லுார் 4, 5, 6 பிரதான சாலை மற்றும் பழைய திரு.வி.க., பாலம் ஆகிய இடங்களில் ஆரோக்கிய நடைபாதை அமைக்கப்படும்
மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 5 கோடி ரூபாய் மதிப்பில், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதவியல் பூங்கா அமைக்கப்படும்
சென்னையின் தாழ்வான பகுதிகளில், மழைநீர் தொட்டிகள் வாயிலாக பருவ மழைக்காலங்களில் மழைநீர் சேகரித்து, அதிக திறன் கொண்ட பம்புகள் உதவியுடன், மழைநீர் கால்வாய் வழியாக, வெளியேற்றும் தொட்டிகள் 15 இடங்களில், 18 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
அண்ணா நகர் டாக்டர் விஸ்வேஸ்வரையா பூங்கா, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்
வள்ளூவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைக்க, 98 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்
தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் பிற துறைகளில் பெருகிவரும் இடத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வருவாயை பெருக்க, முக்கிய இடங்களில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பு வாயிலாக, நவீன வசதிகளுடன் கூடிய, உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்.
:
