வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகளவில் போட்ட வரிகளை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்க சட்டப்படி வரி விதிக்க பார்லிமென்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. டிரம்ப்புக்கு இல்லை எனத் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி வரிகளை விதித்தார். இதற்கு அந்நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.
இந்நிலையில், டிரம்ப்பின் வரி விதிப்பை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்து செய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் ஆதரித்தும் தீர்ப்பு வழங்கினர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: அமெரிக்க சட்டமான சர்வதேச அவசரநிலைபொருளாதார சட்டத்தின்படி வரி விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை. அமெரிக்க சட்டப்படி, வரி விதிக்க பார்லிமென்டுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
