வருமான வரி செலுத்தும் நடைமுறை பலருக்கு தலைவலி பிடித்த காரியமாக இருக்கும்.
எனவே வரி செலுத்தும் முறையை எளிமையாக்க புதிய இணையத்தளம் ஒன்றை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தளத்தில் வரி செலுத்துவோரின் சந்தேகங்களைத் தீர்க்க ‘கர் சாதி’ (Kar Saathi) என்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட் இணைக்கப்பட்டுள்ளது.
இது வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் வரி செலுத்துவோரின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
