அதாவது பயனர்கள் நேரடியாக வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, படிப்படியான வழிகாட்டுதலை வழங்குவது, வருமான வரி படிவங்களைப் பதிவிறக்கம் செய்வது, தாக்கல் செய்யும் முறை மற்றும் புதிய வரி விதிமுறைகள் போன்ற அனைத்து சந்தேகங்களையும் இந்த ஏஐ கருவி வழிகாட்டுகிறது.
தொழில்நுட்ப ரீதியாக மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், சாதாரண மக்களும் வரி விதிமுறைகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள ஒரு பாலமாக அமையும். குறிப்பாக PAN பொருத்தமின்மை மற்றும் ITR பிழைகள் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.
இது வரி செலுத்துவோருக்கான “ஒரே இடத்தில் அனைத்துத் தீர்வுகளையும் வழங்கும்” ஒரு அமைப்பாக செயல்படுகிறது. வரி விதிகளைப் புரிந்துகொள்வது முதல், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளை விளக்குவது மற்றும் நேரடி வரி இணக்கம் குறித்த கேள்விகளுக்குத் தீர்வு காண்பது வரை அனைத்தையும் இது உள்ளடக்கியுள்ளது.
இந்த முன்முயற்சி, வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறையை எளிமையாகவும், விரைவாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
