இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணும், வருமான வரித்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.ஷீலாவும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம், தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 763 நாட்கள் கால தாமதத்தை ஏற்று பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது. மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு தன்னிச்சையானது எனக்கூற எந்த முகாந்திரமும் இல்லை” எனக்கூறி வி.எஸ்.ஜெ.தினகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
