வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

எண்கள் மாறும் வருமான வரிப் படிவங்கள் – மாற்றங்களின் பட்டியல் இதோ!

வருமான வரி

வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது.

இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து வருமான வரிக் கணக்குத் தாக்கல் வரை… இனி பல புதுப்புது மாற்றங்களைச் சந்திக்க உள்ளோம்.

இதுவரை வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் போது, தரவுகளை நாம் நிரப்பி வந்தோம். இனி அப்படி இல்லை.

வருமான வரிப் படிவத்தை ஓபன் செய்தாலே, தரவுகள் ஏற்கனவே பதிவாகி இருக்கும்.

அதை செக் செய்தால் போதுமானது. மேலும், ஏதேனும் தரவுகளில் மாற்றம் இருந்தால், அதை எடிட் செய்துகொள்ளலாம்.

income tax - வருமான வரி
income tax – வருமான வரி

இதே மாதிரி, இனி வருமான வரிப் படிவங்களின் நம்பர்களும் மாற உள்ளதாம்.

வரைவு வருமான வரிச் சட்டம், 2026-ன் கீழ்,

சம்பளதாரர்களின் படிவமான 16-ன் பெயர் 130 ஆக மாற உள்ளது.

இப்படி எந்தெந்த படிவங்களின் பெயர் எப்படி மாற உள்ளது என்பதைப் பார்ப்போம்.

3CA, 3CB, 3CD > 26

16A > 131

24Q > 138

26Q > 140

27Q > 144

26AS > 168

ஆக, இனி வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, படிவங்களின் பெயரைப் பார்த்து தாக்கல் செய்யவும் மக்களே.

Source link