வர்த்தக சிலிண்டர் ஒதுக்கீடு 70 சதவீதமாக அதிகரிப்பு

இதையடுத்து மாநிலங்​களுக்​கான வர்த்தக சிலிண்​டர் ஒதுக்​கீட்டை கடந்த வாரம் 50 சதவீத​மாக உயர்த்​தி​யது. உணவு விடு​தி​கள், ஓட்​டல்​கள், தொழிற்​சாலை கேன்​டீன்​கள், பொது​மக்​கள் நலன்​களுக்கு உதவுவதற்​காக இந்த ஒதுக்​கீட்டை உயர்த்​தி​ய​தாக பெட்​ரோலித்​துறை செய​லா​ளர் நீரஜ் மிட்​டல் தெரி​வித்​திருந்​தார்.

தற்​போது கூடு​தலாக 20 சதவீதம் ஒதுக்​கீடு செய்து வர்த்தக சிலிண்​டர்​கள் விநி​யோகத்தை 70 சதவீத​மாக உயர்த்​தி​யுள்​ளது. தற்​போது கூடு​தல் விநி​யோக சிலிண்​டர்​களை எஃகு, வாக​னங்​கள், ஜவுளி, சாயம், ரசாயனம் மற்​றும் பிளாஸ்​டிக் தயாரிப்​பில் ஈடு​படும் தொழிற்​சாலைகளுக்கு வழங்க முன்​னுரிமை அளிக்க வேண்​டும் என மாநிலங்​களின் தலைமை செயலர்​களுக்கு நீரஜ் மிட்​டல் கடிதம்​ எழு​தி​யுள்​ளார்​.

Source link