வலிமையான ராணுவம் தாக்கப்பட்ட வரலாறு உண்டு: டிரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: ” உலகிலேயே அமெரிக்க ராணுவம் வலிமையானது என டிரம்ப் கூறி வருகிறார். ஆனால், பலமான ராணுவம் மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறும் உண்டு,” என ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகிலேயே வலிமையான ராணுவத்தை வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறி வருகிறார். உலகின் வலிமையான ராணுவம் மீண்டும் எழ முடியாதபடி பல முறை தாக்கப்பட்டு உள்ளது.

ஈரானை நோக்கி போர்க்கப்பல்களை அனுப்பி வருவதாக அமெரிக்கர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ராணுவ தளவாடங்களில் போர்க்கப்பல் என்பதுஆபத்தானது தான். அதேநேரத்தில், போர்க்கப்லை கடலின் ஆழத்திற்கு அனுப்பும் அளவுக்கு மோசமான ஆயுதம் உள்ளன.

47 ஆண்டுகளாக ஈரானை, அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இது சிறந்த ஒப்புதல். உங்களாலும் அதனை செய்ய முடியாது என நான் கூறுகிறேன். இவ்வாறு கமேனி கூறியுள்ளார்.

டிரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஈரானை எப்படியாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க அமெரிக்கா அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ஈரான் அதற்கு பிடி கொடுக்கவில்லை. மேற்காசியாவில் போரை தவிர்க்க வேண்டும் என அரபு நாடுகள் அழுத்தம் கொடுத்தன. இதனால், அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஈரான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடிவு இதுவரை எட்டப்படவில்லை.இதற்கு இடையே, ஈரானுக்கு போர்க்கப்பலை அனுப்பப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link