வலுப்பெறுகிறதா அதிமுக கூட்டணி? புதிதாக இணைந்துள்ள மற்றொரு கட்சி

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல்முனை போட்டி நிலவும் என்பதால், அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. இதன் காரணமாக, அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, பாஜக, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில், பாமக விற்கு 18, அமமுகவிற்கு 11 மற்றும் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 169 இடங்களில் போட்டியிட உள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புதிதாக சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகமும் இணைந்துள்ளது.  

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பரதன் கூறுகையில், “மத்திய மண்டலத்தில் உள்ள 45 தொகுதிகளில் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் இருக்கும் என்பதை, அதிமுக கூட்டணியில் சேர்ந்ததின் மூலமாக உறுதி செய்து இருக்கின்றோம். 

அதிமுக கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீரங்கம் தொகுதியை விரும்பி கேட்டுள்ளோம். இருப்பினும், மணச்சநல்லூர் தொகுதியைக் கொடுத்தாலும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் காட்டுவோம். இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட உள்ளோம்” என்று தெரிவித்தார்.  

Source link