தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது. இருப்பினும், கடந்த மூன்று நாட்களாகத் தமிழகம் முழுவதும் பெரிய அளவிற்கு மழை எதுவும் இல்லை. மேலும், வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது.
இந்தச் சூழலில், வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடந்தது. மேலும், அது தமிழ்நாட்டின் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரையிலான கடல் பகுதியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில்தான்தாய்லாந்து வளைகுடா பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஉருவாகியிருக்கிறது.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், சமீபத்திய செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுக்க வாய்ப்பிருப்பதாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
வட தமிழகக் கடலோரப் பகுதிகளை நெருங்குமா?
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் தொடக்கத்தில் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளிலும் நகர அதிக வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தீவிரமடையுமா வடகிழக்குப் பருவமழை?
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் வடகிழக்குப் பருவமழையின் இரண்டாவது சுற்று தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கில் போட்டியிடும் அண்ணாமலை! தமிழகத்தில் உருவாகும் புதிய கட்சி!
மீனவர்கள் கடலுக்குச் செல்லலாமா?
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வு மற்றும் அது வலுப்பெறும் விதத்தைப் பொறுத்தே தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழையின் தீவிரம் அமையும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனவே, தற்போதைய வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் கடலுக்குச் செல்வது தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தேவையில்லாமல் கடல் பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளையும் கடல்சார் எச்சரிக்கைகளையும் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்
Source link
