வளைகுடா துறைமுகங்கள் எதுவும் பாதுகாப்பாக இருக்காது.. முற்றுகையை தொடங்கும் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானுடன் பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில்ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இன்று மாலை முதல் ஈரானிய துறைமுகங்களுக்கு வரும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த முற்றுகை பொருந்தும் என்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியே வரும் கப்பலை முற்றுகையிடுவோம் எனவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. கூறினார்

இந்நிலையில் இந்த நடவடிக்கையை கடற்கொள்ளை என்று ஈரான் வர்ணித்துள்ளது.

தனது துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடலில் உள்ள எந்தவொரு துறைமுகத்தின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”வளைகுடா மற்றும் ஓமான் கடலில் பாதுகாப்பு என்பது ஒன்று அனைவரும் இணைந்திருக்க வேண்டும் அல்லது ஒன்றுமே இல்லாமல் போயிருக்க வேண்டும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் முற்றுகை குறித்த அறிவிப்பு உலகளாவிய எண்ணெய் சந்தைகளை பெரும் வீழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 8 சதவீதம் உயர்ந்து 104.24 டாலராகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 7 சதவீதம் உயர்ந்து 102.29 டாலராகவும் உள்ளது.

Source link