வாகன சோதனைக்கு எதிர்ப்பு: பெண் அதிகாரியுடன் சீமான் வாக்குவாதம்

காரைக்குடி: காரைக்குடியில் வாகன சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெண் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தமிழக சட்டசபைக்கு ஏப்.,23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அனுமதி பெறாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். அவர்களின் வாகன சோதனைக்கு தலைவர்களின் வாகனமும் தப்பவில்லை.

கடந்த 23ம் தேதி இரவு கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த துணை முதல்வர் உதயநிதியின் காரை, வேடசந்தூரில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர். பிறகு 25ம் தேதி கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியிலும் அவரது காரில் வாகன சோதனை நடத்தியிருந்தனர்.

இதேபோல், இன்று மார்ச் 29 ம் தேதி, கன்னியாகுமரியில் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் வாகனத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தனர்.இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் செக்போஸ்ட் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சீமான் காரை மறித்துதேர்தல் பறக்கும்படையினர் சோதனையிட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீமான், காரில் இருந்து இறங்கி, பெண் அதிகாரி சுப்புலட்சுமியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது இபிஎஸ், ஸ்டாலின் காரையும்சோதனை செய்ய வேண்டும் என்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Source link