வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்றால் கணக்கெடுக்கும் போது என்ன செய்தீர்கள் – அண்ணாமலை கேள்வி

வி த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் கிருஷ்ணகியில் பெண்கள் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது: வி த லீடர்ஸ் அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படும். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். நம்முடைய கனவு மிகப்பெரிய கனவு. தமிழ்நாட்டை மறுபடியும் ஒரு பொருளாதார சக்தியாக மாற்ற வேண்டும். ஹரியானா, உத்தர பிரதேசம், ஜிஎஸ்டி செலுத்துவதில் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது.

தமிழ்நாடு ஜிஎஸ்டி செலுத்துவதில் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. தேசியம் குறித்து யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் இருக்க கூடிய ஒரு தரப்பினர் ஏதோ ஒரு காரணத்திற்காக ஏதோ ஒரு பிரச்சினையை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்ற போது எல்லோரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தீர்களா? ” என்றார்.

Source link