வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுவுக்கு தான் பயம்: இபிஎஸ்

சென்னை: ” திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால், திமுகவுக்கு தான் பயம் உள்ளது. எங்களுக்கு பயம் இல்லை,” என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

மாதவரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது : அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் இல்லாத போதும் மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களை கடனாளி ஆக்கி உள்ளனர். அரசு கடன் வாங்குகிறது. அந்த கடனை மக்கள் தான் கட்ட வேண்டும். வரி போட்டு அரசு கடனை திருப்பி செலுத்தும். சொந்த பணத்தில் இருந்து மக்களுக்கு ஸ்டாலின் கொடுக்கவில்லை. அனைத்தும் அரசு பணம்.

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுகவின் சாதனைகள் குறித்து பொதுவெளியில் பேச தயார் . உங்களால் முடியுமா?ஓட்டுப்பதிவு இயந்திரம் உடையும் அளவுக்கு அதிமுகவுக்கு மக்கள் ஓட்டளிக்கப் போகின்றனர். அதிமுகவை குறைத்து மதிப்பிட வேண்டாம். 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி.

இருக்கிறதா? இல்லையா? என்ற நிலையில் அதிமுக உள்ளது. திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுகவுக்கு தான் பயம். அதிமுகவுக்கு இல்லை.

தமிழகத்தில் மன்னராட்சியை கொண்டு வர ஸ்டாலின் முயற்சி செய்கிறார். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். எங்களுக்கு மக்கள் தான் எஜமானன். உங்களுக்கு குடும்பம் தான் முக்கியம்.

வாரிசு அரசியல் தான் முக்கியம். திமுக வளர்வதற்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரங்கட்டுப்பட்டுவிட்டனர். கருணாநிதி குடும்பத்தில் பிறக்காத காரணத்தினால் துரைமுருகனுக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. இருபெரும் தலைவர்கள் இல்லாத போதும் அதிமுக வலிமையாக உள்ளது அதிமுகவை உடைக்க முடியவில்லை. மக்களை பற்றி கவலைப்படாதவர் ஸ்டாலின். மக்களை பற்றி கவலைப்படும் கட்சி அதிமுக.

அதிமுகவில் இருந்ததினால் உங்கள் முன் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துஇருக்கிறது. சாதாரண தொண்டரும் பெரிய பதவியை அடைய முடியும் பொதுச்செயலாளர் பதவியை அடையலாம். அதிமுக கட்சி தொண்டனால் எம்பி,எம்எல்ஏ, அமைச்சர், முதல்வர் ஆகலாம். இப்படி ஸ்டாலின் எந்த கூட்டத்திலாவது பேச முடியுமா? இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Source link