வாடிகன்; ஈரான் போரின் மரணங்களும், வேதனைகளும் மனித குலத்திற்கே அவமான சின்னம். இனியும் நம்மால் மவுனமாக இருக்க

வாடிகன்; ஈரான் போரின் மரணங்களும், வேதனைகளும் மனித குலத்திற்கே அவமான சின்னம். இனியும் நம்மால் மவுனமாக இருக்க முடியாது என்று போப் 14ம் லியோ கண்டித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்துள்ள போர் 4வது வாரத்தை எட்டியுள்ளது. தினம், தினம் தாக்குதல்களை இருதரப்பினரும் தீவிரப்படுத்தி உள்ளனர். போர் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத சூழல் காணப்படுவது, உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பீதியும் ஏற்படுத்தி உள்ளது.

இந் நிலையில் போரினால்ஏற்படும் மரணங்களும், வேதனைகளும் மனித குலத்தின் அவமான சின்னம் என்று போப் 14ம் லியோ வேதனையுடன் கண்டித்துள்ளார். வாடிகன் நகரில் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது;

தற்போது மத்திய கிழக்கில் உள்ள சூழலை நான் மிகுந்த மனவேதனையும் கவனித்துக் கொண்டே வருகிறேன். உலகில் உள்ள பிற பகுதிகளை போலவே, இந்த பகுதியும் போர் மற்றும் வன்முறையால் சின்னாபின்னமாகி இருக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற அப்பாவி மக்களின் துயரங்களுக்கு முன்னால் நாம் மவுனமாக இருக்க முடியாது.

நிராயுதபாணியான அவர்களை பாதிக்க செய்யும் எந்தவொரு விஷயமும், ஒட்டு மொத்த மனித குலத்தையே பாதிக்கிறது. இந்த போரால் ஏற்படும் மரணங்கள், வேதனைகள் அனைத்தும் முழு மனித குலத்திற்கே பெரும் அவமானச்சின்னம். கடவுளை நோக்கி எழும் கூக்குரல்.

இவ்வாறு போப் 14ம் லியோ பேசினார்.

Source link