வான்கடே: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை

வான்கடே: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

10வது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களில் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று துவங்கிய இந்தத் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற சீனியர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் இந்திய அணி முதல்முறையாக டி20 உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்தியா பேட்டிங் செய்கிறது. பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறவில்லை. அதேபோல, பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Source link