வார தொடக்க முதல் நாளில் சரிந்த தங்கம் விலை; சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 குறைவு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கத்தை கண்டு வருகின்றன. இம்மாத துவக்கத்தில் இருந்து, நம் நாட்டில் குறைந்து வந்த தங்கம் விலை கடந்த சனிகிழமை அதிகரித்தது.

தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 15,050 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 1,20,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் வார தொடக்க முதல் நாளில் இன்று (மார்ச் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,950க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் 290ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source link