வாஷிங்டன்: அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது என வெள்ளை மாளிகையின்

வாஷிங்டன்: அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது, கடந்த ஒரு மாதமாக, இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதலை அமெரிக்கா நடத்தலாம் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. போர் பதற்றம் குறித்து, சமீபத்தில், நம் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் விவாதித்தனர்.

இந்நிலையில் மெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக, நம் துாதரகம் வெளியிட்ட செய்தியில், ” இந்தியாவுடனான எங்களின் அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவடையும். இந்திய பிரதமர் மோடியும், நானும் எந்த வேலைகளாக இருந்தாலும் செய்து முடித்து சாதிப்போம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது ஏஎன்ஐ செய்தி சேனலுக்கு வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில், ”அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது. மேலும், இரு தலைவர்களும் போனில் தொடர்பு கொண்டு பேசினர். இது ஒரு பயனுள்ள உரையாடலாக அமைந்தது,’ என தெரிவித்தார்.

Source link