வாஷிங்டன்: ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது, தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக

வாஷிங்டன்: ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது, தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். தவிர ,”ஒரு கேளிக்கைக்கு கூட அந்த தீவின் மீது தாக்குதல் நடத்தினால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை,” என கிண்டலாக பேசியுள்ளார்.

ஈரானின் கடற்கரையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது கார்க் தீவு. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்த தீவின் வழியாகவே ஈரான் கையாள்கிறது.

ஆணிவேர்

இதனால், கார்க் தீவு ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாக திகழ்கிறது. தவிர, இத்தீவு ஈரானின் வலுவான ராணுவ தளமாகவும் செயல்படுகிறது. இங்கு ஈரானிய கடற்படை தளங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் இருப்பதால், கார்க் தீவை ஒரு கண்காணிப்பு நிலையமாகவும் ஈரான் பயன்படுத்தி வருகிறது-.

கடந்த 13ம் தேதி கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்தார். இத்தாக்குதலில், கார்க் தீவில் உள்ள 90க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும், கடற்படை கண்ணி வெடி சேமிப்பு மையங்கள், ஏவுகணை பதுங்கு குழிகள் மற்றும் ராணுவ விமான நிலையங்களும் இதில் அடங்கும் எனவும் அவர் அறிவித்தார்.

இத்தாக்குதலில், ஈரானின் பொருளாதாரத்திற்கு ஆணி வேராக விளங்கும் எண்ணெய் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில், வேண்டுமென்றே தாக்கவில்லை என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கார்க் தீவு மீது தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

பொழுதுபோக்கு

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்பும்படி நட்பு நாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், டிரம்ப் கூறுகையில், ”அமெரிக்க தாக்குதல்களில் கார்க் தீவின் பெரும்பகுதி அழிந்துவிட்டன. தாக்குதல் மேலும் தீவிரமாகலாம். பொழுதுபோக்கிற்கு கூட தாக்குதல் நடத்துவோம். மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரான் தயாராக இருந்தாலும், அதற்கான நிபந்தனைகள் இதுவரை இறுதியாகவில்லை,” என்றார்.

Source link