வாஷிங்டன்: 'ஈரானுடனான போரில் எங்களுக்கு உதவாத உலக நாடுகளுக்கு இனி உதவ மாட்டோம். ஒன்று எங்களிடம் பெட்ரோல்

வாஷிங்டன்: ‘ஈரானுடனான போரில் எங்களுக்கு உதவாத உலக நாடுகளுக்கு இனி உதவ மாட்டோம். ஒன்று எங்களிடம் பெட்ரோல் வாங்குங்கள் அல்லது ஈரானிடம் போராடி வாங்கி கொள்ளுங்கள்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியுள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்துள்ள போர், 32வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

ஈரான் முடக்கி வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ராணுவ உதவி செய்யும்படி, உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், எந்த ஒரு நாடும் முன்வரவில்லை.

உலக நாடுகள் நெருக்கடி இதற்கிடையே உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் உலக நாடுகளின் நெருக்கடியால், போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டாலும், போரில் இருந்து விலகிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், கடும் விரக்தியான வார்த்தைகளுடன் கூடிய பதிவை டிரம்ப் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் கிடைக்காமல் பல நாடுகள்தத்தளிக்கின்றன. ஈரான் உடனான போரில் எங்களுக்கு உதவாத, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன.

எப்படி போராட வேண்டும் ஒன்று, எங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள்; எங்களிடம் அதிகளவில் உள்ளது. அப்படி இல்லையென்றால், இப்போதாவது தைரியத்தை வரவழைத்து, ஹார்முஸ் ஜலசந்தி சென்று எடுத்துக் கொள்ளுங்கள்.

நமக்காக எப்படி போராட வேண்டும் என்பதை இனியாவது துவக்குங்கள். எங்களுக்கு உதவாத நாடுகளுக்கு இனி அமெரிக்காவும் உதவி செய்யாது.

ஈரான் முழுதும் நசுக்கப்பட்டு விட்டது. பெரிய ஆபத்துக்கள் நீக்கப்பட்டு விட்டன. போய் உங்களுக்கு தேவையான எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link