வாஷிங்டன்: ஈரான் சரண் அடைய போகிறது என ஜி7 நாடுகளிடம் அதிபர் டிரம்ப் கூறியதாக அமெரிக்க நாளிதழில் செய்தி

வாஷிங்டன்: ஈரான் சரண் அடைய போகிறது என ஜி7 நாடுகளிடம் அதிபர் டிரம்ப் கூறியதாக அமெரிக்க நாளிதழில் செய்தி வெளியிடட்டு உள்ளது. ஆனால், அடுத்த நாளை அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும் என ஈரான் புதிய ஆட்சியாளர் கூறியுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் குறித்து ஜி7 நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று முன்தினம் ஆன்லைனில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில தலைவர்கள் கூறியதாக அமெரிக்க நாளிதழான ஆக்சியோஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: ஈரான் சரண் அடையப் போகிறது. தற்போது ஈரானில் முடிவு எடுக்க எந்தத் தலைவர்களும் உயிருடன் இல்லை. தங்களின் தலைவர் யார் என யாருக்கும் தெரியவில்லை. இதனால், சரண் அடைகிறோம் சொல்வதற்கு ஒருவரும் இல்லை என டிரம்ப் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், நேற்று ஈரானின் புதிய ஆட்சியாளரான மொஜ்தாப் கமேனி, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படை தளங்கள் மீதான தாக்குதல் தொடரும். ஈரான் ஆட்சியாளர்களை கொன்றதற்கு பழிவாங்குவோம் என அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும், போரை நிறுத்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் 3 நிபந்தனைகளை விதித்து இருந்தார்.

ஆனால், டிரம்ப் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஈரானின் பயங்கரவாத ஆட்சியை அழித்துவிட்டோம். ராணுவம், பொருளாதாரம் உள்ளிட்டவை அழிவை சந்தித்துள்ளன. ஆனால், தோல்வியை சந்தித்து வரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழை படித்தால், அமெரிக்கா வெற்றிபெறவில்லை என நீங்கள் நினைக்கக்கூடும். ஈரான் கடற்படை ஒழிக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் விமானப்படை இல்லாமல் செய்துவிட்டோம். ஏவுகணைகள், டிரோன்கள் என அனைத்தையும் நிர்மூலமாக்கிவிட்டோம். அவர்களின் தலைவர்கள் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டு விட்டனர். எங்களிடம் ஈடு இணையற்ற து துப்பாக்கிகள், அளவில்லா வெடிமருந்துகள், போதுமான நேரம் உள்ளன.

இந்த மனப்பிறழ்வு கொண்ட ஈனப்பிறவிகளுக்கு என்ன நகர்கிறது என்பதை பாருங்கள் உலகம் முழுவதும் அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். இப்போது அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாகிய நான், அவர்களை கொன்று கொண்டிருக்கிறேன். இதனை செய்வது பெரும் கவுரவம் எனத் தெரிவித்துள்ளார்.

Source link