வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போரில் வெற்றி பெற்றது ரஷ்யா மட்டுமே என ஐரோப்பிய யூனியன்

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போரில் வெற்றி பெற்றது ரஷ்யா மட்டுமே என ஐரோப்பிய யூனியன் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் கூட்டு தாக்குதலில் வெற்றியாளராக ரஷ்யா உள்ளது. எரிசக்திகளின் விலை உயர்வு காரணமாக, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நிதி கிடைக்க புதிய வாய்ப்புகளை பெறுகிறது. ஈரான் மீதான தாக்குதல் நடக்காவிட்டால், ராணுவ தளவாடங்கள் உக்ரைனுக்கு கிடைத்து இருக்கும். தற்போது அதுவும் கிடைக்காத காரணத்தினால் ரஷ்யாவுக்கு பலன் கிடைத்துள்ளது.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் குறித்து அனைவரது கவனமும் உள்ளதால், உக்ரைன் விவகாரம் மங்கி போனது. சர்வதேச விதிகள் அடிப்படையிலான சட்டத்திற்கு அமெரிக்கா சவால் விடுத்துள்ளது. எனவே நாம் அதனை பாதுகாக்க வேண்டும். வெடிகுண்டுகள் மூலம் சுதந்திரமும், மனித உரிமைகளும் பெற முடியாது. சர்வதேச சட்டங்கள் மட்டுமே அதனை உறுதி செய்ய முடியும். பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடாது. இது, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை தாண்டி பல நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இவ்வாறு ஆன்டோனியோ கோஸ்டா கூறினார்.

Source link