வாஷிங்டன்: ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்க ராணுவ அமைச்சர் தான் காரணம் என பீட் ஹெக்செத் மீது அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்க ராணுவ அமைச்சர் தான் காரணம் என பீட் ஹெக்செத் மீது அதிபர் டிரம்ப் பழிபோட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிராக போர் அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 4வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரான் மின்நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதுநடத்தப்பட இருந்த அனைத்து ராணுவ தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். ஈரான் போரை தொடங்கக் காரணம், நெதன்யாகுவா, டிரம்பா என பல கேள்விகள் எழுந்தது.

இந்த மோதல் எவ்வாறு அரங்கேறியது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல்களைத் தொடுக்கத் தயாராக இருந்ததாகவும், அதுவே இறுதியில் அமெரிக்காவையும் இதில் ஈடுபடுத்தியதாகவும் கூறுகின்றனர். இந்த சூழலில், ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்க ராணுவ அமைச்சர் தான் காரணம் என பீட் ஹெக்செத் மீது அதிபர் டிரம்ப் பழிபோட்டுள்ளார்.

அமெரிக்காவின் மெம்பீஸ் நகரில் நடந்த வட்டமேசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியர் ராணுவ அமைச்சர் தான். மத்திய கிழக்கில் ஒரு பிரச்னை உள்ளது. அதை இப்போது தீர்க்கலாமா தள்ளிப்போடலாமா என்று நான் கேட்டேன். ஈரானை அணுகுண்டு தயாரிக்க அனுமதிக்க கூடாது தாக்குவோம் என பீட் ஹெக்செத் தான் கூறினார்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.

முன்னதாக, போர் தொடங்கியதற்கு டிரம்ப்பே பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார். ஒரு கட்டத்தில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தவிர்ப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக டிரம்ப் விளக்கம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link