வாஷிங்டன்: எல்லா கப்பல்களும் செல்வதற்கு ஈரான் அனுமதிக்கும் வரை, ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த ஒரு கப்பலும்

வாஷிங்டன்: எல்லா கப்பல்களும் செல்வதற்கு ஈரான் அனுமதிக்கும் வரை, ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த ஒரு கப்பலும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. பெரும்பாலான விஷயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் கவலைக்குரிய விஷமான அணுஆயுதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

உலகின் மிச்சிறந்த அமெரிக்க கடற்படை , ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையவோ அல்லது அதில் இருந்து வெளியேறவோ முயற்சி செய்யும் அனைத்து கப்பல்களையும் தடுக்கும் வேலையை உடனடியாக துவங்கும். எல்லா கப்பல்களுக்கும் ஈரான் அனுமதிக்கும் வரையும் இது தொடரும்.

ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை செல்ல அனுமதிக்காத ஈரான், அங்கு கண்ணி வெடி வைக்கப்பட்டுள்ளது . எங்கிருக்கிறது என தெரியவில்லை எனக்கூறி வருகிறது. இது உலகளவில் மிரட்டி பணம் பறித்தல் ஆகும். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் பயப்பட மாட்டார்கள்.

சர்வதேச கடல் பரப்பில் ஈரானுக்கு கப்பம் செலுத்தி உள்ள கப்பல்களை தேடி கண்டறிந்து நிறுத்தும்படி அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டு உள்ளேன். சட்டவிரோதமாக கப்பம் கட்டிய எவருக்கும், பாதுகாப்பான பயணம் சாத்தியமாகாது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை அழிக்கும் பணியையும் துவங்கி உள்ளோம். எங்கள் மீதோ அல்லது அமைதியான முறையில் பயணிக்கும் கப்பல்கள் மீதோ துப்பாக்கிச்சூடு நடத்தும் எவரேனும் நரகத்துக்கு அனுப்பப்படுவார்கள்.

மற்றவர்களை விட ஈரானுக்கு இது நன்றாக தெரியும். ஏற்கனவே அழிவை சந்தித்துள்ள ஈரான் எப்படி இந்த சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றி தெரியும். அவர்களின் கடற்படை, விமானப்படை அழிந்துவிட்டது. ரேடார் பயனற்றதாகிவிட்டது. அணு ஆயுதக் கொள்கையால் கமேனி உள்ளிட்ட பல தலைவர்கள் இறந்துவிட்டனர்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை தடுக்கும் பணி விரைவில் துவங்கும். மற்ற நாடுகளும் இந்தப் பணியில் ஈடுபடும். சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறித்து லாபம் பார்க்கும் ஈரானின் செயலை அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. குறிப்பாக அணுஆயுதம் தேவைப்படுகிறது. ஈரானில் மிச்சமிருப்பதையும் ராணுவம் அழித்துவிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.

Source link