வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுப்பதற்காக, ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுப்பதற்காக, ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாலும், எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தியதாலும், சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு தீர்வு காண, ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அனுமதியளித்துள்ளது. இருப்பினும், தேவை அதிகரிப்பின் காரணமாக, தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை தாறுமாறாக ஏறி வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதை தடுக்கும் விதமாக, ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; சுமார் 14 கோடி ஈரான் எண்ணெய் பேரல்கள் தற்போது கடலில் முடங்கியுள்ளன. இதனை வைத்து 2 வாரங்கள் சர்வதேச அளவிலான தேவையை சமாளிக்க முடியும். இந்தப் போருக்கு மத்தியிலும், எண்ணெய் விநியோகத்தை அதிகரித்து, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும். நாங்கள் நிதிச் சந்தைகளில் தலையிடவில்லை. மாறாக நேரடி எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கிறோம், இவ்வாறு கூறினார்.

Source link