வாஷிங்டன்: கடந்த 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, பிரசாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி டிரம்பை படுகொலை செய்ய

வாஷிங்டன்: கடந்த 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, பிரசாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி டிரம்பை படுகொலை செய்ய முயன்றவருக்கு, அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உள்ளது.

கடந்த 2024ம் செப்டம்பர் 15ம் தேதி புளோரிடா மாகாணத்தில் தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கோல்ப் கிளப் அருகே, ஏகே-47 துப்பாக்கியுடன் ஓடுவதை கண்ட ரகசிய போலீஸ் அதிகாரிகள் அவரை மடக்கி கைது செய்தனர். இவர் 59 வயதான ரியான் ரூத் என அடையாளம் காணப்பட்டார்.

கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். தற்போது அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை அமெரிக்க நீதிமன்ற நீதிபதி ஐலீன் கேனன் வழங்கினார். இந்த தீர்ப்பை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

Source link