வாஷிங்டன்: காசாவின் மறு சீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்துக்கு அதன்

வாஷிங்டன்: காசாவின் மறு சீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்துக்கு அதன் உறுப்பு நாடுகள், 45,000 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023 அக்டோபரில் துவங்கி இரண்டாண்டுகளாக மோதல் நடந்து வந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியில் கடந்தாண்டு அக்டோபரில் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, போருக்கு பிந்தைய காசாவை நிர்வகிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அமைதி வாரியத்தை உருவாக்கினார்.

இவ்வாரியத்தின் தலைவராக டிரம்ப் செயல்படுகிறார். இந்த அமைப்பு, காசாவின் நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பாக செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தின் உறுப்பு நாடுகள், காசாவின் மறுசீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக, 45,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்க முன்வந்துள்ளன.

இது தவிர, காசாவில் அமைதியை ஏற்படுத்த ‘சர்வதேச நிலைப்புத்தன்மை படை’ மற்றும் உள்ளூர் போலீஸ் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பவும் உறுப்பு நாடுகள் சம்மதித்துள்ளன.

நாளை மறுதினம், அமைதி வாரியத்தின் முதல் கூட்டம், வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இதில், பல நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். உதவி திட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூட்டத்தில் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link