வாஷிங்டன்: 'சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முதுகெலும்பாக திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை, ஈரான்

வாஷிங்டன்: ‘சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முதுகெலும்பாக திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை, ஈரான் முடக்க முயல்வதை தடுக்க, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

தன் சமூக வலைதளத்தில், ‘பாதிக்கப்பட்ட நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்பி வைக்கும் என நம்புகிறேன். அதே சமயம், ஈரானின் கடற்பகுதி மீது அமெரிக்கா தொடர் குண்டுமழை பொழியும். ஈரான் கப்பல்கள், படகுகள் தென்பட்டால், உடனடியாக சுட்டு வீழ்த்துவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Source link