வாஷிங்டன்: போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேறும் வரை, மேற்காசியாவில் இருந்து படைகளை திரும்பப் பெற மாட்டோம் என,

வாஷிங்டன்: போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேறும் வரை, மேற்காசியாவில் இருந்து படைகளை திரும்பப் பெற மாட்டோம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து, சமூக வலைதள பதிவில் டிரம்ப் கூறியுள்ளதாவது:

ஈரானுடனான போரில் உண்மையான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது முழுமையாக செயல்படுத்தப்படும் வரை தற்போதுள்ள நிலையே தொடரும். அதாவது, ஈரானை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை தற்போதைக்கு திரும்பப் பெற மாட்டோம்.

போர் நிறுத்தத்தை ஈரான் மீறினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இதுவரை பார்த்திராத அளவுக்கு மிகப்பெரியதாகவும், வலிமையானதாகவும் எங்களுடைய தாக்குதல்கள் இருக்கும். ஏற்கனவே கணிசமாக சிதைக்கப்பட்டுள்ள ஈரானை அழிப்பதற்கும், சட்டப்பூர்வமாக தண்டிப்பதற்கும் தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link