வாஷிங்டன்: ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க விலக்கு அளித்துள்ள அமெரிக்கா, இந்தியா ஒரு சிறந்த கூட்டாளி

வாஷிங்டன்: ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க விலக்கு அளித்துள்ள அமெரிக்கா, இந்தியா ஒரு சிறந்த கூட்டாளி என்று பாராட்டி உள்ளது.

ஈரானை கைப்பற்றியே விடுவது என்ற திட்டத்துடன் அந்நாடு மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளது. இதில், இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை தொடுத்து வர, இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளது. அதே சமயத்தில் இந்தியாவில் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது, தட்டுப்பாடு அபாயம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.

போர் நீடிக்கும் தருணத்தில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை 30 நாட்களுக்கு இந்தியா கொள்முதல் செய்யலாம் என்று அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந் நிலையில், கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் வாங்கும் இந்தியா, ஒரு சிறந்த கூட்டாணி என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

உலகளவில், கச்சா எண்ணெய் விலையை நிலைநிறுத்தி பாதுகாப்பதில் இந்தியா ஒரு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்வது இந்த முயற்சியின் ஒரு பகுதி. இதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது.

மிக பெரிய எண்ணெய் நுகர்வோர் மற்றும் சுத்திகரிப்பு செய்யும் நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய நாடு. அமெரிக்கர்கள், இந்தியர்களின் சந்தை ஸ்திரத்தன்மைக்காக இருநாடுகளும் கைகோர்த்து செயல்படுவது அவசியம்.

இவ்வாறு செர்ஜியோ கோர் குறிப்பிட்டுள்ளார்.

Source link