வாஷிங்டன்: ''வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்க அரசு காப்பீடு மற்றும் கடற்படை பாதுகாப்பு

வாஷிங்டன்: ”வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்க அரசு காப்பீடு மற்றும் கடற்படை பாதுகாப்பு அளிக்கும்” என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசிய நாடுகளின் ஏற்றுமதி கப்பல்கள் செல்லும் ஒரே கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், 700 எண்ணெய் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

ஹார்முஸ் வழியாக எந்த கப்பலையும் அனுமதிக்க மாட்டோம் என்று ஏற்கனவே அறிவித்த ஈரான், 2 கப்பல்களை தாக்கியது.

இந்நிலையில், கப்பல் வர்த்தகத்திற்கு காப்பீடு, கடற்படை பாதுகாப்பு வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வளைகுடா வழியாகப் பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும், குறிப்பாக எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஆபத்து காப்பீடு மற்றும் கடற்படைப் பாதுகாப்பு வழங்க அமெரிக்க மேம்பாட்டு நிதி கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய், எரிவாயு கப்பல்களுக்கு அமெரிக்க படை பாதுகாப்பு அளிக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Source link