விஜயகாந்த் புகழை சீரழித்த குடும்பம்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போக்சோ வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
கல்வியில் ஊழல் மலிந்துள்ளது. மருத்துவமனைகளில் சுகாதாரம் இல்லை. மத நல்லிணக்கத்தை தி.மு.க., அரசு சீரழித்து வருகிறது. பல கோவில்களில், பிற சமுதாய மக்களை அனுமதிப்பது இல்லை. பல பள்ளிகளில் ஜாதி மோதல்கள் நடக்கின்றன.
இது போல், பல விஷயங்கள் தமிழகத்தில் உள்ளன. மாநில உரிமைகளுக்காக, தி.மு.க., போராடும் என, முதல் வாக்குறுதி அளித்துள்ளனர். அப்படி எதுவும் இதுவரை செய்யவில்லை.
ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்வதாகக் கூறினர். அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியருக்கு, இலவச ‘நாப்கின்’ வழங்கப்படுவதில்லை. இப்படி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் புகழை, அவரது குடும்பமே சீரழித்து விட்டது.

— நாராயணன் திருப்பதி
தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,

Source link