விஜயதசமி அல்லது தசரா பண்டிகை, நவராத்திரியின் விழாவின் நிறைவாக பத்தாவது நாளில் கொண்டாடப்படும் திருநாள் ஆகும். இந்த நாளில் அன்னை போரில் அசுரர்களை வென்று, வெற்றி வாகை சூடிய திருநாளாக கொண்டாடப்படுகிறது.
வெற்றியை தரும் விஜயதசமி திருநாளில் அனைவருடனும் வாழ்த்துக்களையும், அன்பையும், ஒற்றுமையையும் வாட்ஸ்ஆப்பில் அழகிய படங்களுடன் பகிர்ந்திடுவோம்.
விஜயதசமி விழா :
நவராத்திரியின் பத்தாம் நாளாக கொண்டாடப்படுவது விஜயதசமி திருநாளாகும். தீமையை வென்று, நன்மைகளை அம்பிகை காத்த திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துர்கை, மகிஷாசுரனை வதம் செய்து, போரில் வெற்றி பெற்று, மகிஷாசுரமர்த்தினியாக காட்சி அளித்த நாளாக விஜயதசமி விழா இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
தசரா கொண்டாட்டம் :
ராமன், ராவணனை வென்ற நாளாக வட இந்தியாவில் தசரா என்ற பெயரில் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. தசரா பண்டிகை நாளில் தான் பாண்டவர்கள், தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தில் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன.இது வெற்றியை தரும் திருநாள் என்பதால் இந்த நாளில் துவங்கப்படும் செயல்களும் வெற்றியாக முடியும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
விஜயதசமி, தசரா 2026 வாழ்த்துக்கள் :
இந்த ஆண்டு விஜயதசமி தசரா 2026 திருநாள் அக்டோபர் 20ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கவும், இந்த நாளில் துவங்கப்படும் செயல்கள் வெற்றியானதாக இருக்க வேண்டும் என அனைவருடனும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்திடுவோம்.
